ads

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட போராட்டத்தில் களமிறங்கிய மருந்தகங்கள்

காவிரி மேலாண்மை வாரியம் காலம் தாழ்த்தாமல் அமைத்திட வேண்டுமென்று தற்போது மருந்தகங்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் போராட்ட களத்தில் இறங்கியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் காலம் தாழ்த்தாமல் அமைத்திட வேண்டுமென்று தற்போது மருந்தகங்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் போராட்ட களத்தில் இறங்கியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை கண்டித்து தற்போது தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதில் மாணவர்கள், விவசாயிகள் என பல தரப்பினரும் மத்திய அரசை கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நாளுக்கு நாள் இந்த போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த போராட்டத்தில் மருத்து கடைகளும் இணைந்துள்ளன.

மேலும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மருந்தகங்கள் இயங்காது எனவும், அத்தியாவசிய மருந்துகளை பொதுமக்கள் இன்றே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட போராட்டத்தில் களமிறங்கிய மருந்தகங்கள்