ads
65வது தேசிய விருதுகளை குவித்த சிறந்த படங்கள்
வேலுசாமி (Author) Published Date : Apr 13, 2018 15:42 ISTபொழுதுபோக்கு
ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் சிறந்த கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் நடிகைகள் என தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தேசிய விருதுகள் தொடங்கி 64 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. தற்போது 65ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவின் பல மொழி சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பல விருதுகளையும், உலகம் முழுவதும் வசூல் சாதனைகளையும் படைத்த 'பாகுபலி 2' படம் மூன்று தேசிய விருதுகளை தட்டி சென்றுள்ளது. சிறந்த பிரபலமான படம், சிறந்த ஸ்பெஷல் எபக்ட் மற்றும் சிறந்த சண்டை பயிற்சி என மூன்று விருதுகளை வென்றுள்ளது. பாகுபலி படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு இயக்குனர் ராஜமௌலி நன்றி தெரிவித்துள்ளார்.
இதேபோல் பிரபல இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'காற்று வெளியிடை' படத்திற்கும், சிறந்த பின்னணி இசைக்கான விருது ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான 'மாம்' படத்திற்கும் வென்றுள்ளார். மேலும் இயக்குனர் சங்கல்ப் ரெட்டி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்ற 'காஸி அட்டாக்' படத்திற்கு தெலுங்கின் சிறந்த படத்திற்கான விருது கிடைத்துள்ளது.
இதே போன்று கடந்த ஆண்டு இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் வெளியான 'டேக் ஆப்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை பார்வதிக்கு சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த கலை இயக்குநர், சிறந்த ஒப்பனைக் கலைஞர் போன்ற ஐந்து கேரள அரசு விருதுகளையும் வென்றுள்ளது