ads

குலேபகாவலி படத்தின் சேராமல் போனால் வீடியோ வெளியீடு

gulaebagavali movie seramal ponal video song released

gulaebagavali movie seramal ponal video song released

இயக்குனர் எஸ் கல்யாண் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா நடிப்பில் சென்ற பொங்கலுக்கு வெளியான படம் 'குலேபகாவலி'. இந்த படத்தில் நடிகர் பிரபுதேவாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இந்த படத்திற்கு காஞ்சிபுரம் சுதர்சன் இசையமைத்துள்ளார். ஆர்எஸ் ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, சந்தியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக ஜனவரி 12-இல் அமைந்தது.

இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா புதையலை தேடி அலையும் பயணத்தை மேற்கொள்கிறார். இந்த படத்தின் மூலம் பிரபுதேவாவின் நடனம், நடிப்பு மட்டுமல்லாது அவருடைய புதுவிதமான தோற்றத்தையும் அனுபவத்தையும் ரசிகர்களுக்கு அளித்தது. இந்த படம் தற்போது வரை வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த படத்தின் போஸ்டர், டீசர், ட்ரைலர் போன்றவை வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பலமாக அதிகப்படுத்தியது. இந்த படத்தில் இடம் பெறும் 'குலேபா', 'ஹார்ட்டுக்குள்ளே' போன்ற பாடல்களை முன்னதாக படக்குழு வெளியிட்டது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இடம்பெறும் 'சேராமல் போனால்' என்று தொடங்கும் வீடியோ பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. 

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் பிரபு தேவா தமிழில் யங் மங் ஜங், மெர்குரி, லட்சுமி மற்றும் ஹிந்தியில் காமோஷி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத சில படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக நடிகர் சல்மான் கானை வைத்து 'தபங்' படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் மூலம் 'வான்டட்' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக சல்மான் கான், பிரபு தேவா கூட்டணி இணைகிறது.

gulebagavali movie ringtonesgulebagavali movie ringtones

குலேபகாவலி படத்தின் சேராமல் போனால் வீடியோ வெளியீடு