ads

'சங்கு சக்கரம்' ட்ரைலரை வெளியிட்ட 'விக்ரம் வேதா' படக்குழு

sangu chakkaram trailer

sangu chakkaram trailer

புதுமுக இயக்குனர் மாரிசன் இயக்கத்தில் பிரபல லியோ விசன்ஸ், சினிமாவாலா பிக்ச்சர்ஸ், திவ்யா மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கே.சதீஸ், வி.எஸ்.ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் படம் சங்கு சக்கரம். இந்த படம் இன்றைய கால குழந்தைகள் ரசிக்கும் விதத்தில் பேய் கலந்த நகைச்சுவை அடிப்படையில்  எடுக்கப்பட்டுள்ளது. மேலும் லியோ விசன்ஸ் தயாரிப்பு நிறுவனம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற வெற்றி படங்களை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த படத்திற்கு ஷாபீர் இசையமைத்துள்ளார். இவர் இசையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்ட 'டாறு டமாறு' என்று தொடங்கும் சிங்கிள் டிராக் பாடல் மற்றும் இதற்கு முன்னதாகவே வெளிவந்த படத்தின் போஸ்டர், டீசர் போன்றவை ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. டிசம்பர் 29-ஆம் தேதி வெளிவர உள்ள இப்படத்தில்  கீதா, திலீப் சுப்பராயன், மோனிகா, நிகேஷ், ஆதர்ஷ், பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ட்ரைலரை புகழ் பெற்ற 'விக்ரம் வேதா' படக்குழுவினர் அனைவரின் முன்னிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடுவதாக தெரிவித்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளிவந்துள்ளது.

'சங்கு சக்கரம்' ட்ரைலரை வெளியிட்ட 'விக்ரம் வேதா' படக்குழு