ads

விக்ரம் வேதா வெற்றிக்கு காரணம் - மாதவன்

vikram vedha 100th day celebration

vikram vedha 100th day celebration

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், ஸ்ரத்தா ஸ்ரீகாத் உட்பட பலர் நடிப்பில் கடந்த ஜூலை 21ல் வெளிவந்த படம் விக்ரம் வேதா. இந்த படம் வெளிவந்து 100 நாட்கள் எட்டியும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த 100வது நாள்  வெற்றியை சென்னையில் நேற்று கொண்டாடினர். இதில் கலந்து கொண்ட படத்தின் நடிகர் நடிகைகள்,தொழில் நுட்ப கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டது. 

இந்த விழாவில் பேசிய நடிகர் மாதவன், இந்த படம் நல்ல வெற்றியை அடையும் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. இந்த வெற்றிக்கு காரணம் புஷ்கர் காயத்ரி ஏனென்றால் படத்தின் கருத்தை எளிதில் ரசிகர்கள் பிரிந்து கொள்ளும் அளவிற்கு உருவாக்கியுள்ளார். இதனால் படம் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது, மேலும் நான் சொன்ன சில கருத்துக்களை எடுக்காததால் அதிகளவு வரவேற்பு கிடைத்திருந்து.   

மேலும் படத்திற்கு வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை இருந்ததால் வெளிவந்த அன்றே நான் வெளியூர் சென்று விட்டேன் என்று கூறியுள்ளார்.  

விக்ரம் வேதா வெற்றிக்கு காரணம் - மாதவன்