சேதுபதியின் கேரக்டரை உதறி தள்ளிய ஷாருக் கான்

       பதிவு : Dec 03, 2017 00:12 IST    
Shah Rukh Khan Still Shah Rukh Khan Still

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 'விக்ரம் வேதா' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தினை ஹிந்தியில் எடுப்பதற்காக மாதவன் முடிவு செய்து, ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ஷாரூக்கானிடன் கதை சொல்லபட்டது. கதையின் கருத்து பிடித்ததினால் ஷாருக் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். சேதுபதியின் வில்லன் கேரக்டரில் ஷாருக் நடிப்பதாக இருந்தது. ஆதலால் படத்தின் மற்ற வேலைகளை படக்குழு துவங்கினர்.        

இந்நிலையில் ஷாருக் படத்தில் நடிப்பதற்கு மறுத்துவிட்டு இதில் இருந்து விளக்கியிருக்கிறார். இதைபற்றி ஷாரூக்கிடம் கேட்கும் போது அவர் தரப்பில் இருந்து கூறியன. வில்லன் கதாபாத்திரம் பிடித்ததால் படத்தில் நடிப்பதர்க்கு ஒப்புக்கொண்டேன். ஆனால் சமீபத்தில் நான் நடித்து வெளிவந்த 'ஃபேன்' படத்தின் க்ளைமேக்ஸ் மற்றும் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் பார்க்கையில் ஒன்றாக இருப்பதினால் இதில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்.     

 


சேதுபதியின் கேரக்டரை உதறி தள்ளிய ஷாருக் கான்


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்