ads

பல வித கெட் -அப்பில் விஜய் சேதுபதி - ஆச்சர்யப்படும் ரசிகர்கள்

oru nalla naal paarthu solren movie teaser

oru nalla naal paarthu solren movie teaser

அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. விஜய் சேதுபதியுடன் இணைந்து கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா, ரமேஷ் திலகம், விஜி. சந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் முதல் முதலாக பல வித கெட்டப்பில் சேதுபதி களமிறங்கியுள்ளார். 

இந்நிலையில் படத்தின் டீசரில், சீதையை கடத்தி கூட்டிட்டு வந்த ராவணனை அரக்கன் என்று சொல்றோமா.... அதே ராமன் சீதையை கூட்டிட்டு வந்து தீயிலே எரிசிட்டான....அவர கடவுள் என்று சொல்றோமா...இதில் யாரு நல்லவங்க, யாரு கெட்டவங்க என்று சேதுபதியின் கேள்விக்கு பலரும் பல விதமாக பதில் சொல்வது போன்றும் இறுதியில் விஜய் சேதுபதி இங்க ராமனும் நான் தான், ராவணனும் நான் தான் என்று சொல்வது போன்று டீசரை முடித்திருந்தனர்.  சில வினாடிகளிள் இடம் பெற்றுள்ள டீசரில் விஜய் சேதுபதியின் பல வித கெட்டப்புகளில் கலக்கி இருப்பது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் இருந்தது. 

பல வித கெட் -அப்பில் விஜய் சேதுபதி - ஆச்சர்யப்படும் ரசிகர்கள்