ads

மணிரத்னம் இயக்கவிருக்கும் மல்டி ஸ்டார் - 'அக்னி நட்சத்திரம்' இரண்டாம் பாகமா ?

director mani rathnam new movie

director mani rathnam new movie

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'காற்று வெளியிடை' படத்தினை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் பல பிரபல நட்சத்திர வட்டாரங்களை கொண்டு அடுத்த படத்தினை இயக்கவிருக்கிறார். இந்த படத்தின்  படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு துவங்கவுள்ளது. 

அரவிந்த் சாமி, சிலம்பரசன், பிரகாஷ் ராஜ், ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். மேலும் இவர்களில் சிலர் மணிரத்னம் இயக்கத்தில் முதல் முதலாக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மணிரத்னம் இயக்கவிருக்கும் இப்படத்தினை 'மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் இந்த படத்திற்காக வைரமுத்து எழுதிய  6 பாடல்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். அதில் 3 பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையின் பணியை முடித்திருப்பது குறிபிடத்தக்கது.      

இந்நிலையில் மணிரத்னம் இயக்கும்  மல்ட்டி ஸ்டார் படம், ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் தோற்றத்தில் இருக்கலாம் என்றும், இல்லை  இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் தகவல் கசிந்துள்ளது. அக்னி நட்சத்திரம் 1988ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்தது.    

மணிரத்னம் இயக்கவிருக்கும் மல்டி ஸ்டார் - 'அக்னி நட்சத்திரம்' இரண்டாம் பாகமா ?