ads

தெலுங்கில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகல்

ar rahman quit vijay sethupathi movie

ar rahman quit vijay sethupathi movie

உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கொண்டு 'சயிரா நரசிம்ம ரெட்டி' படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் இந்த படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப்பச்சன், கிச்சா சுதீப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சுமார் 150 கோடி பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. இன்னும் படப்பிடிப்பு தொடங்காத நிலையில் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக இருந்த ரவி வர்மன் விலகினார். இதனை அடுத்து ஆர்.ரத்னவேலு அவருக்கு பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

 இந்நிலையில் தற்போது இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் விலகியுள்ளார். தொடர்ந்து அதிக படங்கள் காத்திருப்பதால் தான் இந்த படத்தில் இருந்து விலகினேன் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது இவருக்கு பதிலாக எஸ்.தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை ராம்சரண் கொனிதலா கம்பெனி ப்ரொடக்சன் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் முதல் முதலாக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

sye raa movie sye raa movie

தெலுங்கில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகல்