ads

படம் வெளியாவதற்கு முன்பே கருத்து சொல்லாதீர்கள் - ஷாகித் கபூர்

படம் வெளியாவதற்கு முன்பே கருத்து சொல்லாதீர்கள் - ஷாகித் கபூர்

படம் வெளியாவதற்கு முன்பே கருத்து சொல்லாதீர்கள் - ஷாகித் கபூர்

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பத்மாவதி'. இந்த படத்தை வியாகாம் 18 மோஷன் பிக்ச்சர்ஸ் மற்றும் பன்சாலி ப்ரொடக்சன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங், ஜிம் சார்ப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சுமார் 180 - 190 கோடி பொருட்செலவில் இந்த படம் உருவாகியுள்ளது. வரும் டிசம்பர் 1-ஆம் தேதி வெளிவரும் இந்த படத்திற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் 13-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராஜ புத்திர வம்சத்தை சேர்ந்த சித்தூர் ராணி பத்மினி கதையை அடிப்படையாக கொண்டது. 

டெல்லி சுல்தான் ஆலாவுத்தீன் கில்ஜி ராணி பத்மினி மீது ஆசை கொண்டு படை எடுத்தான். இந்த காட்சிகள் தவறாக சித்தரித்துள்ளதாக ராஜ்புட் சமூகத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். மும்பையில் உள்ள சஞ்சய் லீலா பன்சாலி அலுவலகம் முன்பும் போராட்டம் நடந்தது. இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஷாகித் கபூர் "இந்த வகையான போராட்டங்களை பல நாட்களாக காண்கிறேன். படம் வெளிவருவதற்கு முன்பே கருத்து சொல்லாமல் படத்தை பார்த்து விட்டு பின்னர் குறை கூறுங்கள். இந்த ''பத்மாவதி" படம் வெளியாவதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். அனைவரது உணர்வையும், கருத்துக்களையும் நாங்கள் மதிக்கிறோம். எங்களால் முடிந்த வரை சிறப்பாக காண்பித்திருக்கிறோம். இந்த படத்தை பார்த்த பின்னர் மக்கள் என்ன நினைத்தாலும் அவர்களை மதிப்போம். இந்த படத்தை நினைத்து நாங்கள் பெருமை அடைகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

படம் வெளியாவதற்கு முன்பே கருத்து சொல்லாதீர்கள் - ஷாகித் கபூர்