ads
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இசை வெளியீடு திடீர் மாற்றம்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Nov 01, 2017 12:27 ISTபொழுதுபோக்கு
கார்த்தி காவல் துறை அதிகாரியாக வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் பஸ்ட் லுக், டீசர், ட்ரைலர் போன்றவை முன்னதாகவே வெளிவந்துள்ளது. எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு தயாரிக்கும் இப்படத்தில் ராகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்துள்ளார்.
ஜிப்ரான் இசையில் நாளை வெளிவர இருந்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் இசை வெளியிட்டு, சென்னையில் பெய்து வரும் தொடர் கன மழை காரணத்தினால் ரத்து செய்யப்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர்களான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு தெரிவித்துள்ளனர்.
முன்பே அறிவித்தது போன்று இசை வெளியீட்டு இணையத்தளத்தில் வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. கார்த்தி மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் வருகிற நவம்பர் 17ம் தேதி வெளியிடப்படுவதாக படக்குழுவினர் கூறினார்.