ads
மணிரத்னம் இயக்கத்தில் காவல் துறை அதிகாரியாக மக்கள் செல்வன்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Jan 10, 2018 20:36 ISTபொழுதுபோக்கு
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 'காற்று வெளியிடை' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் தற்பொழுது பல பிரபல நட்சத்திர வட்டாரங்களை கொண்டு அடுத்த படத்தினை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் 'தனி ஒருவன்' அரவிந்த் சாமி, சிலம்பரசன், பிரகாஷ் ராஜ், ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இவர்களில் சிலர் மணிரத்னம் இயக்கத்தில் முதல் முதலாக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் இயக்கவிருக்கும் மல்ட்டி ஸ்டார் இப்படத்தினை 'மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் இம்மாத இறுதியில் துவக்க உள்ளனர். மேலும் இந்த படத்திற்காக வைரமுத்து எழுதிய 6 பாடல்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். அதில் 3 பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையின் பணியை முடித்திருப்பதாக தகவல் முன்னதாக வெளிவந்திருந்தது. இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாபாத்திரதின் தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலில் விஜய் சேதுபதி படம் முழுக்க நிறைந்து இருப்பதாகவும், இப்படத்தின் முக்கிய வேடமான காவல் துறை அதிகாரியாக வளம் வருவதாகவும் தற்பொழுது வந்த தகவலில் வெளியானது. இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.