ads
மணிரத்னம் படத்தில் சிம்பு நடிப்பது உறுதியா? புதிய தகவல்
மோகன்ராஜ் (Author) Published Date : Dec 05, 2017 15:54 ISTபொழுதுபோக்கு
சமீபகாலமாக நடிகர் சிம்பு மீது தொடர்ந்து குற்றசாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அவர் நடித்த AAA படத்தின் மூலம் எனக்கு 18 கோடி நஷ்டம் என படத்தின் தயாரிப்பாளர் 'குளோபல் இன்போடேன்மெண்ட்' யின் மைகேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் ஒன்றினை அளித்திருந்தார். இந்த புகார் குறித்து நடிகர் சிம்பு அவரது கருத்தினை வெளியிட்டிருந்தார். இதன் காரணத்தினால் சிம்பு மீது ரெட் கார்ட் போடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல பிரபலங்கள் ஒன்றிணைந்து நடிக்கவிருக்கும் படத்தில் சிம்பு முன்னதாகவே கமிட்டாகியிருந்தார். ரெட் கார்ட் போடப்பட்டதினால் படத்தில் இருந்து மணிரத்னம் விலகிவிடுவார் என்று பலரும் தகவலை வெளியிட்டனர்.
இந்நிலையில் மணிரத்னம் இயக்கவிருக்கும் புது படத்தில் சிம்பு வருகிற 2018ம் ஆண்டு ஜனவரி 20 ம் தேதியிலிருந்து ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்று சினிமா துரையின் நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளனர்.
நடிகர் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமான சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டில் கலந்து கொண்டு அவர் மீது உள்ள குற்றசாட்டுகளை குறித்து மனம் திறக்க போகிறார்.