ads

தொட்ரா படக்குழுவினரை மகிழ்ச்சி படுத்திய சிம்பு

thodra movie stills

thodra movie stills

நடிகர் பாண்டியராஜின் மகன் பிரித்விராஜ் இவர் தமிழ் திரையுலகில் தொட்ரா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தினை பாக்யராஜின் உதவியாளர் மதுராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது.    

 நாயகியாக வீணா நடித்துள்ள இப்படத்தில் உத்தமராஜா இயைமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் படத்திற்கு சிம்பு ஒரு பாடலை பாடினால் சிறப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் தீர்மானித்தனர். இதனால் சிம்புவிடம் பாடலின் வரிகளை காண்பித்தது இந்த பாடலை படுமாறு படக்குழுவினர் கேட்டு கொண்டனர். இந்த பாடலின் வரிகள் சிம்புவிற்கு பிடித்ததால் பாடல் படுவதற்கு ஒப்பந்தம் அளித்து பாடலை பாடிக் கொடுத்துள்ளார்.

புதிய நடிகர் என்று பார்க்காமல் சிம்பு இந்த பாடலை பாடிக் கொடுத்தது படக்குழுவினர் அனைவருக்கும் மிகுந்த சந்தோஷமாக இருந்ததாக இசையமைப்பாளர் கூறியுள்ளார். சக்க போடு போடு ராஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சிம்பு தற்பொழுது படங்களில் நடிப்பதோடு பாடல் பாடுவதில் அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறார். இவர் பாடிய 'தட்றோம் தூக்றோம்' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.   

simbu imagessimbu images

தொட்ரா படக்குழுவினரை மகிழ்ச்சி படுத்திய சிம்பு