ads

விஸ்வாசம் விஜய் 62 படத்திலிருந்து விலகிய யுவன் சங்கர் ராஜா

viswasam thalapathy 62 music composer

viswasam thalapathy 62 music composer

இயக்குனர் சிவா மாற்று நடிகர் அஜித் கூட்டணி நான்காவது முறையாக 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்' படத்திற்கு பிறகு இணைந்துள்ளது. இந்த படத்திற்கு 'விஸ்வாசம்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இதனை நிரூபிக்கும் விதமாக முன்னதாக இவருடைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த படத்தை 'விவேகம்' படத்தை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு பணிகளையும், ரூபன் எடிட்டிங் பணிகளையும் மேற்கொள்கிறார். முன்னதாக அஜித்தின் 'விஸ்வாசம்' படத்திற்கும், விஜயின் 62வது படமாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தையும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் விஜயின் 62 வது படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்று அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதனை அடுத்து அஜித்தின் 'விஸ்வாசம்' படத்திலிருந்தும் யுவன் சங்கர் ராஜா விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அனிருத் மற்றும் சாம் சி எஸ் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. இன்னும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ள நாயகிகள் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகை அனுஷ்கா  நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

viswasam thalapathy 62 music composerviswasam thalapathy 62 music composer

விஸ்வாசம் விஜய் 62 படத்திலிருந்து விலகிய யுவன் சங்கர் ராஜா