விஸ்வாசத்தில் நாயகியாக இணையும் அனுஷ்கா

       பதிவு : Nov 30, 2017 12:18 IST    
ansuhka join viswasam movie ansuhka join viswasam movie

சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் போன்ற v வரிசைகளை தொடர்ந்து நான்காவது முறையாக 'விஸ்வாசம்' படத்தின் மூலம் அஜித்துடன் இணைந்துள்ளார். இந்த படத்தின்  டைட்டிலை வேதாளம் படத்தினை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. மேலும் வேதாளம் படத்தினை தொடர்ந்து அஜித்தின் 58வது படமான விஸ்வாசத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் நாயகி, மற்ற நடிகர் நடிகையின் தேர்வு நடைபெற்று வருகிறது. முன்பு வந்த தகவலின் படி கீர்த்தி சுரேஷ், தமன்னா, அனுஷ்கா ஷெட்டி நடிகைகளுடன் பேச்சி வார்த்தை நடப்பதாகவும், இதில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு அதிகளவு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் அனுஷ்கா இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் அளித்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. மேலும் அனுஷ்கா வெளியிட்ட  புதிய புகைப்படம் வலைத்தளத்தில் வைரலானது. இந்த ஹேர் ஸ்டைல் இந்த படத்திற்காக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

 

 சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வந்த தல அஜித் இந்த படத்தில் கருமையான முடியுடன், விவேகம் படத்தினை விட அதிகமாக உடல் எடையை குறைத்து காணப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 


விஸ்வாசத்தில் நாயகியாக இணையும் அனுஷ்கா


செய்தியாளர் பற்றி

தங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க

rasu editor and writer

ராசுசெய்தியாளர்