ads

வில்லனை தொடர்ந்து மனநிலை மருத்துவராகும் அர்ஜுன்

arjun to play psychological doctor in na peru surya

arjun to play psychological doctor in na peru surya

தமிழில் 'ஜெய் ஹிந்தி 2' படத்திற்கு பிறகு 'சொல்லிவிடவா' என்ற படத்தினை அர்ஜுன் இயக்கிவருகிறார். இதற்கு அடுத்தபடியாக விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'இரும்பு திரை' படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தை கையாண்டுள்ளார். இதனை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் வக்கந்தம் வம்சி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் 'நா பேரு சூர்யா'  படத்தில் நாயகனுக்கு தந்தையாக நடித்து வருவதோடு மனநல மருத்துவர் வேடத்தை சிறப்பாக கையாண்டு வருகிறார். மேலும் இப்படத்தில் நாயகனுக்கு இணையாக அர்ஜுனின் கெட்டப் அமைந்திருப்பதாக இயக்குனர் வம்சி தகவலை வெளியிட்டிருந்தார். இந்த படத்தின் பல காட்சிகளில் அர்ஜுனின் அதிரடி வசனம் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமையும் என்று படக்குழு  தெரிவித்துள்ளது.        

மேலும் இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக அல்லு அர்ஜுன் வளம் வந்துள்ளார். தேச பக்தி கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் சரத்துக்குமார்,  அனு இம்மானுவேல் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளனர். மேலும் இப்படத்தினை ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி, போஜ்பூரி போன்ற 7 மொழிகளில் வெளியிடுவதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளிவரவுள்ள இப்படத்தில் போஸ்டர், டீசர் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று வெளியான சைனிகா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் டீசரில் வெளிவந்த காட்சியில் அல்லு அர்ஜுன் அதிரடி காட்சியில் அதிகளவு ஈடுபட்டிருப்பது தெரிகிறது.  

வில்லனை தொடர்ந்து மனநிலை மருத்துவராகும் அர்ஜுன்