ads

இரும்பு திரை படத்தின் அதிரடி ப்ரோமோ வெளியீடு

irumbu thirai athiradi new promo release

irumbu thirai athiradi new promo release

நடிகர் விஷால் தயாரித்து நடித்து வரும் 'இரும்பு திரை' படத்தின் எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்த நாளுக்கு நாள் படத்தின் புதிய புகைப்படம், ப்ரோமோ வீடியோ என வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் 'அதிரடி' என்ற  ஒரு புதிய ப்ரோமோ வீடியோயை படக்குழு வெளியிட்டுள்ளது. விவேக் எழுதியுள்ள இப்பாடலின் வரிகளுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவரின் இசையில் 125வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இப்பாடலை நவீன் என்பவர் பாடியுள்ளார். தற்பொழுது இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த ப்ரோமோ வீடியோவில் விஷால் ராணுவ அதிகாரி உடையில் சக ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சிகளை கற்று தருவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. காவல் துறை அதிகாரியாக வளம் வந்திருக்கும் விஷால் முதல் முறையாக ராணுவ அதிகாரியாக இப்படத்தின் மூலம் வளம் வருகிறார்.     

புது முக இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கிவரும் இப்படத்தில் விஷால் பல சாகச காட்சியில் ஈடுபட்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தில் நடிகை சமந்தா மனநல மருத்துவராக டாக்டர் ரதி தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். இந்த படத்தின் முக்கிய வேடமான வில்லன் கெட்டப்பை 'ஆக்சன் கிங்' அர்ஜுன் மேற்கொண்டுள்ளார். மற்ற படங்களில் ஹீரோவிற்கு முக்கிய துவம் கொடுக்கும் வகையில் பல காட்சிகள் இடம் பெறுவது போன்று இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வில்லன் கெட்டப்பை வலுப்படுத்தி இருக்கிறாராம் இயக்குனர் மித்ரன். மேலும் இப்படத்தில் பல ஆக்சன் காட்சிகளை அர்ஜுன் சிறப்பாக மேற்கொண்டிருக்கிறாராம்.     

இரும்பு திரை படத்தின் அதிரடி ப்ரோமோ வெளியீடு