ads

இரும்பு திரை டீசரின் 12 மணி நேர சாதனை

irumbu thrai teaser views

irumbu thrai teaser views

பிஎஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால் தயாரித்து நடித்து வரும் 'இரும்புத்திரை'. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிட உள்ளனர். 'அபிமன்யுடு' என்ற தலைப்பில் தெலுங்கில் வெளிவர உள்ள இப்படத்தில் நாயகியாக சமந்தா நடித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வின்சென்ட் அசோகன் போன்றவர் நடித்துள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான வில்லன் வேடத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார். படத்தின் அனைத்து வித படப்பிடிப்புகளும் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு விறுவிறுப்பாக ஈடுபட்டள்ளது.   

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் ஜியார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் ஈடுபட ரூபன் எடிட்டிங் பணியை மேற்கொண்டுள்ளார். புத்தாண்டு விருந்தாக ஜனவரி 26ல் வெளியிட உள்ள இப்படத்தின் போஸ்டர் முன்னதாகவே வெளியிடப்பட்டன. இந்நிலையில் படத்தின் டீசர் நேற்று (29.12.17) வெளியிடப்பட்ட 12 மணி நேரத்தில் யு - டியூபில் 800 ஆயிரம் பார்வையாளர்களை கடந்திருப்பதாக நடிகர் விஷால் அவரது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.  

இரும்பு திரை டீசரின் 12 மணி நேர சாதனை