தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனருடன் இணைந்த தல அஜித்

       பதிவு : Mar 01, 2018 14:46 IST    
நடிகர் அஜித் தனது 59 வது படத்திற்கு தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத்துடன் இணைந்துள்ளார். நடிகர் அஜித் தனது 59 வது படத்திற்கு தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத்துடன் இணைந்துள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'விசுவாசம்'. இந்த படம் அஜித்தின் 58 வது படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகியாக நயன்தாராவும், காமெடி நடிகர்களாக தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அஜித்தின் 59 வது படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்க உள்ளார். முன்னதாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் கடந்த 2014-இல் சதுரங்க வேட்டை படமும், கடந்த ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படமும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

 

இதனை அடுத்து இயக்குனர் வினோத் 'சதுரங்க வேட்டை 2' படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அரவிந்த் சாமி மற்றும் திரிஷா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை நிர்மல் குமார் இயக்கி வருகிறார். இயக்குனர் வினோத் 'சதுரங்க வேட்டை' படத்தின் வெற்றியை அடுத்து அஜித்திடம் கதை சொல்லியிருக்கிறார்.

ஆனால் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்குள் அஜித் 'விவேகம்' படத்திலும், இயக்குனர் வினோத் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திலும் பிசியாகி விட்டனர். இதன் பிறகு அஜித், 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் வினோத்தை அழைத்து கதை கேட்டிருக்கிறார்.

 

கதை பிடித்துப்போக அஜித் அடுத்த படத்தை இயக்க சம்மதம் தெரிவித்துள்ளார். 'விசுவாசம்' படத்திற்கு பிறகு அஜித் தனது படத்திற்கு இயக்குனர் வினோத்துடன் இணைய உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனருடன் இணைந்த தல அஜித்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்