ads

சமூக வலைத்தளத்தில் வலம் வரும் தல மற்றும் குட்டி தல

ajith new hari style

ajith new hari style

நான்காவது முறையாக நடிகர் அஜித் மற்றும் சிவா கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்திற்கு 'விசுவாசம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கான பூஜை நேற்று நடந்துள்ளது. இந்த படத்தில் அஜித் இளமை தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இதனால் ரசிகர்கள் இந்த படத்தில் எப்படி இருப்பார் கற்பனையாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அஜித் மற்றும் அவருடைய மகன் ஆத்விக் அஜித் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி அவரது தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவருடைய மகன் ஆத்விக் அஜித் படிக்கும் பள்ளியில் விளையாட்டு போட்டி நடந்துள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக நடிகர் அஜித்தும் அவருடைய மகனும் சென்றுள்ளனர். தற்போது இவர்களுடைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

சமூக வலைத்தளத்தில் வலம் வரும் தல மற்றும் குட்டி தல