ads
படப்பிடிப்பை நிறுத்திவிட்டு விவசாயத்தில் களமிறங்கிய அக்ஷய் குமார்
வேலுசாமி (Author) Published Date : Apr 14, 2018 15:42 ISTபொழுதுபோக்கு
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் தன்னுடைய படங்களின் மூலம் சமூகம் சார்ந்த கருத்துக்களை மக்களிடம் மிகுதியாக கொண்டு சேர்கிறார். இவருடைய நடிப்பில் இறுதியான வெளியான 'பட்மன்' படமும் நல்ல சமூக கருத்துக்களை பதிவு செய்தது. இந்த படத்தை தொடர்ந்து 'கேசரி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக மஹாராஷ்டிராவில் சடாரா பகுதியில் இருக்கும் கிராமத்திற்கு படக்குழு சென்றுள்ளது.
இந்நிலையில் தற்போது நடிகர் அக்ஷய் குமார் அந்தப் பகுதியில் வசித்து வரும் கிராம மக்களுக்கு உதவி செய்யும் விதமாக 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கி இருக்கிறார். இந்த கிராமத்தில் மழைநீரை சேகரிக்க குளம் வெட்டுவதற்காக இந்த நன்கொடையை வழங்கியுள்ளார். மேலும், படத்தின் படப்பிடிப்பை சிறிதுநேரம் நிறுத்திவிட்டு கிராமத்து மக்களோடு இணைந்து மண்வெட்டியை எடுத்துக்கொண்டு விவசாயத்திலும் களமிறங்கியுள்ளார்.
விவசாயங்களை மறந்து பணம் பணம் என்று அலையும் மக்களுக்கு மத்தியில் இவருடைய செயலுக்கு ஏராளமான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் கிராம மக்களிடம் பேசிய அக்ஷய் குமார் "நாங்கள் சாப்பிடுவதற்கு நீங்கள் கண்ணீர் சிந்தி உழைத்து வருகிறார்கள். ஆனால் உங்கள் கண்களில் நீர் வருவதை என்னால் பார்க்க முடியவில்லை. குழாய்களில் நீர் வருவதைத்தான் பார்க்க விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளாராம். மேலும் சமீபத்தில் அக்ஷய் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களிடம் இருந்து சமூக செல்வாக்கு பெற்ற நபர் என்பதற்கான விருதை பெற்றுள்ளார்.