ads

இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த VIP பிறந்த நாள் இன்று

நடிகர் தனுஷின் 35வது பிறந்த நாள் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாபடப்பட்டு வருகிறது.

நடிகர் தனுஷின் 35வது பிறந்த நாள் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாபடப்பட்டு வருகிறது.

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான அவதாரம் எடுத்துள்ள தனுஷ், தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வட சென்னை' படத்திலும், இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி 2' மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திலும் நடித்து வருகிறார். ஒரு தயாரிப்பாளராகவும் தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் காலா படத்தின் வெற்றிக்கு பிறகு 'வட சென்னை' படத்தை தயாரித்து வருகிறார்.

இது தவிர ஒரு இயக்குனராக 'பா பாண்டி' படத்திற்கு பிறகு தன்னுடைய இரண்டாவது படம் குறித்த அறிவிப்பையும் சமீபத்தில் தெரிவித்துள்ளார். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை கவரும் விதமாக தன்னுடைய நடிப்பு, நடனம், காதல், பாடல்கள் போன்றவற்றில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். 34 வயதான இவருக்கு இன்று பிறந்தநாள் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. இவருடைய பிறந்த நாளுக்கு ஏராளமான சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

துள்ளுவதோ இளமை படத்தில் தன்னுடைய தந்தையான கார்த்திக் ராஜா படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராக அறிமுகமான இவர் தற்போதுவரை 39 படங்களில் நடித்து விட்டார். இவர் நடிப்பில் உருவாகி வரும் வட சென்னை படத்தின் டீசர் இன்று அவருடைய பிறந்த நாளில் வெளியிட உள்ளனர். இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்துள்ளது. இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் மாரி 2, வட சென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா படங்களும் வெற்றி படங்களாக அமைய அவருடைய பிறந்த நாளில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்.

இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த VIP பிறந்த நாள் இன்று