ஷாருக்கானுக்கு கைகொடுத்த தனுஷ் சல்மான் கான்

       பதிவு : Jun 14, 2018 18:17 IST    
நடிகர் சல்மான் கான் ஷாருக்கானின் ஜீரோ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டீசரை தனுஷ் வெளியிட்டுள்ளார். நடிகர் சல்மான் கான் ஷாருக்கானின் ஜீரோ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டீசரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் படம் 'ஜீரோ'. இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ரெட் சில்லிஸ் மற்றும் கலர் எல்லோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஷாருக்கான், அனுஷ்கா சர்மா மற்றும் கத்ரினா கைப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சிறப்பு தோற்றத்தில் சல்மான் கான், தீபிகா படுகோனே, ஸ்ரீதேவி, கஜோல் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். தற்போது இந்த படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். இந்த டீசரில் சல்மான் கான், ஷாருக்கானுக்கு கை கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த படம் மூலம் ஷாருக்கான் மீண்டும் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக ஒரு ரவுண்டு வருவார் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

மேலும் இந்த படத்தில் ஷாருக்கான் மிகவும் உயரம் குறைந்த மனிதராக நடித்துள்ளார். இந்த படத்தில் பிறந்ததில் இருந்தே உயரம் குறைவானதாக காணப்படும் ஷாருக்கான், பிரபலமான கத்ரினா கைப் மீது காதல் வயப்படுகிறார்.  அனுஸ்கா சர்மா அறிவாற்றல் குறைந்த பெண்ணாக நடிக்கிறார். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் ஷாருக்கான் பாவா சிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 


ஷாருக்கானுக்கு கைகொடுத்த தனுஷ் சல்மான் கான்


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்