ஷாருக் கானின் ஜீரோ படத்தில் இணைந்த சல்மான் கான்

       பதிவு : Feb 08, 2018 12:44 IST    
salman khan joined in shah rukh khan zero movie salman khan joined in shah rukh khan zero movie

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஷாருக் கான் தற்போது 'ஜீரோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் 3-4 அடி உயரம் கொண்ட குள்ள மனிதர் கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கி வருகிறார். இவர் முன்னதாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'அம்பிகாபதி' மற்றும் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான 'தனு வெட்ஸ் மனு' போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்தில் முதலில் நடிகர் சல்மான் கான் நடிப்பதாக இருந்தது.

பின்னர் நடிகர் ஷாருக் கான் நடிக்க ஒப்பந்தம் ஆனார். தற்போது இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சல்மான் கான் இணைந்துள்ளார். முன்னதாக நடிகர் ஷாருக் கான், நடிகர் சல்மான் கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'டியூப்லைட்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது சல்மான் கான், ஷாருக் கானின் 'ஜீரோ' படத்தில் இணைந்துள்ளார். மேலும் இருவரும் இணைந்து தற்போது வரை 6 படங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இவர்களுடன் நடிகை கத்ரினா கைப், அனுஸ்கா சர்மா, தீபிகா படுகோன் ஆகிய மூன்று நாயகிகள் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

 

இதில் அனுஸ்கா சர்மா அறிவு குறைந்த பெண் கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் ஷாருக் கானை நவீன தொழில் நுட்பத்தை கொண்டு மூன்று அடி உயரம் கொண்ட மனிதராக உருவாக்கி வருகின்றனர். இந்த படத்தை ரெட் சில்லிஸ் மற்றும் கலர் எல்லோ ப்ரொடக்சன் சார்பில் கௌரி கான் மற்றும் இந்த படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் தயாரித்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 21-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 


ஷாருக் கானின் ஜீரோ படத்தில் இணைந்த சல்மான் கான்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்