காதலர் தினத்தில் ஜிவி பிரகாஷ் சர்ப்ரைஸ்

       பதிவு : Feb 13, 2018 15:57 IST    
gv prakash release morattu single for valentines day gv prakash release morattu single for valentines day

இயக்குனர் தரணீதரன் இயக்கத்தில் நடிகர் சீரிஸ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'ராஜா ரங்குஸ்கி'. இயக்குனர் தரணீதரன் முன்னதாக நடிகர் சத்யராஜ், சிபிராஜ் நடிப்பில் வெளியான `ஜாக்சன் துரை' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் 'மெட்ரோ' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சிரிஷ் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சந்தினி தமிழரசன் நாயகியாக இணைந்துள்ளார். இந்த படத்தை வசன்ஸ் ப்ரொடக்சன் மற்றும் பர்மா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் தரணீதரன் தயாரித்து இயக்கி வருகிறார். குற்றப் பின்னணியை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் சிரிஷ் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார். 

 

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தற்போது இந்த படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று காதலர் தினத்தை முன்னிட்டு நாளை வெளியாக இருக்கிறது.

இந்த பாடலில் காதலர் தினத்தில் காதலர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்றில்லை. சிங்கிளா இருக்கும் பசங்களும் கொண்டாடலாம் என்பதை சொல்லும் பாடலாக முரட்டு சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலின் டைட்டிலை பிரபல நடிகர் மற்றும் இசைமைப்பாளரான ஜிவி பிரகாஷ் வெளியிடவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

 

gv prakash release morattu single for valentines daygv prakash release morattu single for valentines day

காதலர் தினத்தில் ஜிவி பிரகாஷ் சர்ப்ரைஸ்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்