ads

ஜீவாவின் ஜிப்ஸி படத்தில் இணைந்த மாநகரம் அருவி நாச்சியார் பிரபலங்கள்

actor jiiva raju murugan gypsy movie poojai stills, image credit - gypsy team

actor jiiva raju murugan gypsy movie poojai stills, image credit - gypsy team

'ஜோக்கர்' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு 'ஜிப்ஸி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளரான, இயக்குனர் ராஜு முருகன் கைவண்ணத்தில் 'வட்டியும் முதலும்', 'ஒன்றாக', 'ஜிப்ஸி' போன்ற புத்தகங்களை எழுதி வருகிறார்.

இவர் இயக்கவுள்ள இந்த படத்தின் புது படத்தின் தலைப்பை தான் எழுதிய 'ஜிப்ஸி' புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளார். நடிகர் ஜீவாவின் 30வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் தலைப்பை சமீபத்தில் நள்ளிரவில் அறிவித்தனர். இந்த படத்தை மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா போன்ற படங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் அம்பேத் குமார், ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் பணிபுரியவுள்ள தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இவர் முன்னதாக இயக்குனர் ராஜு முருகனின் முதல் படமான 'குக்கூ' படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக ராஜு முருகன் படத்திற்கு இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக செல்வகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னதாக 'மாநகரம்' படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இவர்களை தொடர்ந்து 'அருவி' படத்திற்கு எடிட்டிங் பணிகளை மேற்கொண்ட ரெய்மான்ட் டெரிக் மற்றும் 'நாச்சியார்' படத்தின் கலை இயக்குனர் பாலச்சந்தர் ஆகியோர் எடிட்டிங் மற்றும் கலை பணிகளை மேற்கொள்கின்றனர். நேற்று இந்த படத்தின் பூஜை நடந்துள்ளது.

இந்த பூஜையில் இயக்குனர் பா ரஞ்சித், பிரம்மா, H.வினோத் மற்றும் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். விரைவில் இந்த படத்தில் இணையவுள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

jiiva gypsy movie poojai and crew details revealed, image credit - gypsy teamjiiva gypsy movie poojai and crew details revealed, image credit - gypsy team
jiiva gypsy movie music director santhosh narayanan, image credit - gypsy teamjiiva gypsy movie music director santhosh narayanan, image credit - gypsy team

ஜீவாவின் ஜிப்ஸி படத்தில் இணைந்த மாநகரம் அருவி நாச்சியார் பிரபலங்கள்