ads

ஜீவா, ஷாலினி பாண்டே இணையும் புது பட தலைப்பு

jiiva new movie title

jiiva new movie title

நடிகர் ஜீவா நடிப்பில் தற்போது 'கலகலப்பு 2' படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் ஜீவா புது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் கதாநாயகி ஷாலினி பாண்டே நடிக்கிறார். இந்த படத்திற்கு தற்போது மிகவும் பிரபலமாகி வரும் 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைக்கவுள்ளார். படத்தொகுப்பு பணிகளை ரூபன் மேற்கொள்கிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஜனவரியில் தொடங்க உள்ளது. நடிகர் ஜீவாவின் 29 வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தை அதிரடி த்ரில்லர் படமாக உருவாக்க உள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தலைப்பை முடிவு செய்துள்ளது. நடிகர் ஜீவா மற்றும் ஷாலினி பாண்டே முதல் முறையாக இணையும் இந்த படத்திற்கு 'கொரில்லா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

jiiva new movie titlejiiva new movie title

ஜீவா, ஷாலினி பாண்டே இணையும் புது பட தலைப்பு