ads
விண்ணைத்தாண்டி வருவாயா 2வில் சிம்புவுக்கு பதிலாக மாதவன்
வேலுசாமி (Author) Published Date : Feb 21, 2018 12:27 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க, என்னை அறிந்தால் படங்களின் இரண்டாம் பாகம் ஆர்வமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனை அடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து, அதில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றி ஆலோசித்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்பு நடித்த கார்த்திக் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் கன்னட நடிகரான புனீத் ராஜ்குமார் மற்றும் மலையாள நடிகரான டோவினோ தாமஸ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் தமிழ் படமான 'அபியும் அணுவும்' படம் வரும் மார்ச் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வெளியீடு தேதியை கவுதம் மேனன் சமீபத்தில் அறிவித்தார். இதனை அடுத்து தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். முதல் பாகத்தில் சிம்பு நடிப்பு ரசிகர்களின் நடிப்பிற்கு தற்போது வரை நல்ல வரவேற்பை இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்புவுக்கு பதிலாக மாதவன் நடிப்பது சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் 2001-ஆம் ஆண்டு வெளியான 'மின்னலே' படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிகர் மாதவன் மற்றும் கவுதம் மேனன் கூட்டணி இணைந்துள்ளது.