மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மேடி

       பதிவு : Apr 25, 2018 17:55 IST    
மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் ட்ரைலரை நடிகர் மாதவன் வெளியிட்டுள்ளார். மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் ட்ரைலரை நடிகர் மாதவன் வெளியிட்டுள்ளார்.

நான் சிகப்பு மனிதன் படத்திற்கு பிறகு இயக்குனர் திரு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'. இயக்குனர் திரு முன்னதாக நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் திரு, 'சத்யம்' படத்தில் இயக்குனர் ராஜசேகரிடம் உதவி இயக்குனராக இருந்து தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

கடந்த 7 வருடங்களில் மூன்று படங்களை மட்டும் இயக்கியிருந்த திரு நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகவுள்ளார். இந்த படத்தின் சிறப்பம்சமாக முதல் முறையாக அப்பா மகனான நவரச நாயகன் கார்த்திக், அவருடைய மகன் கவுதம் கார்த்திக் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெஜினா, வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சதீஸ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

சாம் சிஎஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மேலும் சிறப்பம்சமாக நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக் சகோதரி பிருந்தா சிவகுமார் ஒரு பாடலை பாடியுள்ளார். தற்போது இந்த படத்தின் இசையை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் மாதவன் வெளியிட்டுள்ளார். இந்த படம் அடுத்த மே 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது.


மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மேடி


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்