தனுஷ் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் இணையவுள்ள ஜேம்ஸ் பாண்ட்

       பதிவு : Apr 09, 2018 12:21 IST    
கார்த்திக் சுப்பராஜ், தனுஷ் முதன் முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் பிரபல ஹாலிவுட் நடிகர் இணையவுள்ளார். கார்த்திக் சுப்பராஜ், தனுஷ் முதன் முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் பிரபல ஹாலிவுட் நடிகர் இணையவுள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் 2012-இல் 'பிட்சா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவருடைய இயக்கத்தில் மூன்று படங்கள் மட்டுமே கடந்த 6 வருடங்களில் வெளிவந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி அடையும் வகையில் இருந்ததால் ரசிகரிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் என தரமான படத்தை திரையுலகிற்கு அளிக்கும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தற்போது 'மெர்குரி' படம் உருவாகியுள்ளது.

சைலன்ட் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்க உள்ளார். விஜய் சேதுபதி, சித்தார்த் போன்ற இளம் நடிகர்களை வைத்து இயக்கி வந்த கார்த்திக் சுப்பராஜுக்கு தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் திரையுலகில் மேலும் பிரபலமாகியுள்ளார்.

 

ரஜினிகாந்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் நடிகர் தனுஷை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படம் தமிழ் சினிமாவில் முற்றிலும் மாறுபட்டு இருக்க வேண்டும் என்று ஹாலிவுட் நடிகர்களை நடிக்க வைக்க ஆர்வமாக உள்ளனர். முன்னதாக இந்த படத்தில் நடிக்க அல் பசினோ,  ஆல்பர்ட் டி நிரோ போன்ற ஹாலிவுட் நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இவர்களை அடுத்து தற்போது 'ஜேம்ஸ் பாண்ட்' படத்தில் பிரபலமான ' பியர்ஸ் ப்ரொஷ்ணன் (Pierce Brosnan)' என்பவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவர் நடிப்பது உறுதியானால் இந்த படத்தின் மூலம் பிரபல ஹாலிவுட் நடிகரும், தனுசும் இணைந்து நடிக்க உள்ளனர். ஆனால் தற்போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகும் புதுப்படத்தில் கார்த்திக் சூப்பராஜ் பிசியாக உள்ளதால் இந்த படத்தை முடித்த பிறகு தனுஷ் நடிக்க உள்ள புதுப்படத்தை இயக்க உள்ளார்.

 


தனுஷ் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் இணையவுள்ள ஜேம்ஸ் பாண்ட்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்