இணையத்தில் வெளியாகியுள்ள பிரகாஷ்ராஜின் சில சமயங்களில்

       பதிவு : May 01, 2018 14:03 IST    
நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள சில சமயங்களில் படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள சில சமயங்களில் படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரகாஷ் ராஜ், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகரும் ஒருவராக திகழ்கிறார். ரங்கஸ்தலம் படத்திற்கு பிறகு இவருடைய நடிப்பில் தெலுங்கில் மகேஷ் பாபுவின் பரத் அனே நேனு என்ற படம் தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. தமிழில் இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான படம் 'சொல்லிவிடவா'. இந்த படங்களுக்கு பிறகு இவர் தற்போது தமிழில் நடிகையர் திலகம், சில சமயங்களில் , அழியாத கோலங்கள், டிராபிக் ராமசாமி, செய், செக்க சிவந்த வானம் போன்ற படங்களும், மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நீராழி, ஓடியன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதில் தமிழில் இயக்குனர் பிரியதர்சன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள 'சில சமயங்களில்' என்ற படம் தியேட்டருக்கு  பதிலாக இணையதளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை சம்பாதிப்பதற்காக அல்லாமல் விருத்திற்காக உருவாக்கியுள்ளார் இயக்குனர். இந்த படத்தில் பிரகாஷ் ராஜுடன் இணைந்து ஸ்ரேயா ரெட்டி, வருண், அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைப்பில் பிரபுதேவா ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் பிங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

 

இந்த படமானது 90 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடியது, அதாவது ஒன்றரை மணிநேரம் மட்டுமே. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், தனக்கு கொடிய நோயான எய்ட்ஸ் இருக்கின்றதா இல்லையா என்று சந்தேகத்தை ஏற்படுத்தும் சாமானிய மனிதர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் முன்னதாக பல திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றுள்ளது. இதன் பிறகு தற்போது இந்த படம் நெட்ப்ளிக்ஸ் என்ற இணையதளத்தில் கட்டணம் செலுத்தி பார்க்க கூடிய வகையில் இந்த படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 


இணையத்தில் வெளியாகியுள்ள பிரகாஷ்ராஜின் சில சமயங்களில்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்