ads

நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன்லால் படத்தில் இணையும் பிரகாஷ் ராஜ்

prakash raj joins mohanlal in odiyan

prakash raj joins mohanlal in odiyan

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் புகைப்படம் வலைத்தளத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தில் மோகன்லால் 30வயதுடைய இளைஞன் போன்று  உடல் எடையை குறைத்து மெலிதான தோற்றத்தில் காணப்பட்டார். இந்த கெட்-டப்  மோகன்லால் நடிக்கவிருக்கும் 'ஓடியன்' படத்திற்கான தோற்றம் என்று தெரியவந்தது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் பாலக்காடு, கோயம்பத்தூர், பொள்ளாச்சி, ஹைட்ரபாத் மற்றும் வாரணாசி போன்ற இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் இணைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது.        

கடந்த 1997ம் ஆண்டில் வெளிவந்த அரசியல் சார்ந்த படமான 'இருவர்' படத்தின் மூலம் இவர்களது கூட்டணி இணைந்திருந்தது. தற்பொழுது நீண்ட கால இடைவெளிக்கு பிறகு ( 20 ஆண்டுகள் ) மீண்டும் 'ஓடியன்' படத்தின் மூலம் இவர்களது கூட்டணி இணையவிருப்பது குறிப்பிடத்தக்கது. தி ப்ரைஸ், யாத்திரை மொழி, இருவர் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்திருக்கும் இவர்களின் நடிப்பிற்கு வெகுவான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. மேலும் பிரகாஷ் ராஜ் முதல் முதலில் 'தி ப்ரைஸ்' படத்தின் மூலம் மலையாள திரையுலகில்  அறிமுகமானார். இதனை அடுத்து மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த 'இண்ட்ரப்ஸ்தான்' என்ற படத்தில் நடித்து ரசிகர்களிடம் வெகுவான வரவேற்பினை பெற்றிருந்தார்.   

பிரகாஷ் ராஜ் கன்னடம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஸ் போன்ற மொழிகளில் நடித்து திரையுலகில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படங்களை தயாரித்து இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் கில்லி படத்தில் வெளியான 'செல்லம்' என்ற வசனத்தின் மூலம் அதிகளவு பிரபலமானார்.  

 இந்நிலையில் ஸ்ரீகுமார் மேனன் இயக்கிவரும் 'ஓடியன்' படத்தில் ஜெயச்சந்திரன் இசையமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். மேலும் இவரின் பாடலுக்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் பின்னணி இசையை மேற்கொண்டு வருகிறார். 

நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன்லால் படத்தில் இணையும் பிரகாஷ் ராஜ்