ஆஸ்கர் விருதினை வெல்லும் மலையாள சூப்பர் ஸ்டார்

       பதிவு : Dec 20, 2017 13:51 IST    
pulimurugan song oscar award pulimurugan song oscar award

சர்வதேச அளவில் சிறந்த திரைப்பட பாடலுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழா 90வது முறை நடைபெற உள்ளதால் பிரம்மாண்டமான முறையில் லாஸ் ஏஞ்செல்ஸில் என்னும் இடத்தில் அடுத்த ஆண்டு மார்ச் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு படத்தின் பாடல் மட்டும் தேர்வாகியுள்ளது. மலையாள திரையுலகில் முன்னனி நடிகர்களின் ஒருவரான மலையாள 'சூப்பர் ஸ்டார்' மோகன்லால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து ரசிகர்கள், விமர்சனகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ‘புலி முருகன்’ படத்தில் இடம் பெற்ற  ‘காடனையும் கால்சிலம்பே' மற்றும் ‘மானதே மாரிகுரும்பே' என்ற இரு பாடல்களும் ஆஸ்கர் விருது பாடல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.  

 

இந்த படம் வசூலிலும் வெற்றியை பெற்றது. இந்த படத்தினை உதயகிருஷ்ணா கதை, திரைக்கதை, வசனம் எழுத இயக்குனர் வைசாக் இப்படத்தினை இயக்கியிருந்தார். ‘முலக்குப்பாடம் பிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் டோமிச்சன் முலக்குப்பாடம் தயாரித்திருந்த இப்படத்தில் கோபி சுந்தர் இசையமைத்திருந்தார்.  
 


ஆஸ்கர் விருதினை வெல்லும் மலையாள சூப்பர் ஸ்டார்


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்