எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுசுடன் இணைந்த நடிகர் சசிகுமார்

       பதிவு : Feb 18, 2018 16:58 IST    
sasikumar joined in dhanush enai noki paayum thota movie sasikumar joined in dhanush enai noki paayum thota movie

நடிகர் தனுஷ் நடிப்பில் பல மாதங்களாக உருவாகி வரும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இயக்குனர் கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் நடிகர் தனுஷூக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார்.  இந்த படத்தில் நடிகர் ராணா டகுபதி, சுனைனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகர் மற்றும் இயக்குனருமான சசிகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கியது. இதன் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

 

இதற்கிடையே நடிகர் தனுஷ் இயக்கத்தில் பா.பாண்டி மற்றும் இவருடைய நடிப்பில் 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை எடுத்து முடித்தார். இதனால் இயக்குனர் கவுதம் மேனன் தனது கனவுப் படமான நடிகர் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்தை இயக்க ஆரம்பித்தார். இயக்குனர் கவுதம் மேனன் பிசியாக, நடிகர் தனுஷூம் அடுத்ததாக வடசென்னை, தி எக்ஸ்டரார்டினரி ஜர்னி ஆப் பகிர் போன்ற படங்களில் பிசியாகி விட்டார்.

இதனை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு சமீபத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு சுமார் 10 நாட்கள் தொடர்ந்து நடந்தது. இதனால் தனுஷ் வடசென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா என ஒரே நேரத்தில் இரண்டு நடித்து வந்தார். இதன் பிறகு தற்போது இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி 2' படத்தில் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

 

இந்த படத்தில் இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதேவேளையில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் மறுபுறம் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுசுடன் இணைந்த நடிகர் சசிகுமார்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்