ads

சசிகுமாரின் அடுத்த 'அசுரவதம்'

asuravadham new movie

asuravadham new movie

எம்.முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் 'கொடிவீரன்'. இந்த படத்தை சசிகுமார், தனது சொந்த நிறுவனமான கம்பெனி ப்ரொடக்சன் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தில் சசிகுமார், மஹிமா நம்பியார், சனிஷா, விதார்த், பாலா சரவணன், பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இந்த படம் நவம்பர் 30-இல் வெளிவர உள்ளது. 

இதனை அடுத்து நடிகர் சசிகுமார் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரிக்கிறார். இந்த படத்தை மருது பாண்டியன் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'அசுரவதம்' என படக்குழு பெயர் வைத்துள்ளது. இந்த படத்தின் அடுத்த கட்ட அறிவிப்பை விரைவில் படக்குழு அறிவிக்கவுள்ளது.

சசிகுமாரின் அடுத்த 'அசுரவதம்'