சிம்பு நடிக்கும் புது படத்தில் இணைந்த ஓவியா

       பதிவு : Feb 06, 2018 17:45 IST    
actor simbu new movie heroine biggboss oviya actor simbu new movie heroine biggboss oviya

நடிகர் சிம்பு இயக்குனர் மணிரத்னம் இயக்க உள்ள மல்டி ஸ்டார் படத்தில் தற்போது பிசியாக உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்சாமி, ஜோதிகா, ஏஆர் ரஹ்மான், பிரகாஷ் ராஜ்,  அதிதி ராவ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைகிறது. இதற்காக தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்து உடற்பயிற்சி செய்து வருகிறார். சமீபத்தில் இதற்கான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது.

இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு புது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான அனிதா உதீப் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை ஓவியா இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பெண்டாமீடியா குரூப் மூலம் அனிதா உதீப் இயக்க உள்ளார். முன்னதாக அனிதா உதீப் இயக்கத்தில் நடிகர் சிம்பு இசையமைப்பில் 'மரண மட்ட' என்ற பாடல் புத்தாண்டை முன்னிட்டு வெளிவந்தது.

 

இந்த பாடலை நடிகை ஓவியா, சிம்பு, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் இணைந்துபாடியுள்ளனர். தற்போது இவர்களது கூட்டணி சிம்பு நடிக்கும் புது படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தின் மூலம் நடிகை ஓவியா முதன் முறையாக சிம்புவுடன் இணையவுள்ளார். தற்போது நடிகை ஓவியா 'காஞ்சனா 3' மற்றும் 'களவாணி 2' போன்ற படங்களில் பிசியாக உள்ளார். இந்த படங்களை முடித்த பிறகு ஓவியா சிம்புவுடன் இணைந்து நடிக்க உள்ளார். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


சிம்பு நடிக்கும் புது படத்தில் இணைந்த ஓவியா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்