நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஒரு குப்பை கதை செகண்ட் சிங்கிள்

       பதிவு : Feb 23, 2018 18:15 IST    
Actor sivakarthikeyan release Oru Kuppai Kathai movie vaa machi vaadaa machi second single Actor sivakarthikeyan release Oru Kuppai Kathai movie vaa machi vaadaa machi second single

தேசிய விருது பெற்ற நடன இயக்குனரான தினேஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'ஒரு குப்பை கதை'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் காளி ரங்கசாமி இயக்கி வருகிறார். இந்த படத்தை 'பாகன்' படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்லாம் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் நடன இயக்குனர் தினேசுக்கு ஜோடியாக நடிகை மனிஷா யாதேவ் நடித்து வருகிறார்.

தற்போது இந்த படத்தின் 'வா மச்சி வாடா மச்சி' என்று தொடங்கும் பாடலின் சிங்கிள் பாடல் ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் தினேஷ். நடன இயக்குனரான தினேஷ் 2001-ஆம் ஆண்டு வெளியான பிரபு தேவாவின் 'மனதை திருடிவிட்டாய்' படத்தின் மூலம் நடன இயக்குனராக திரையுலகிற்கு அறிமுகமானார்.

 

இதனை தொடர்ந்து தற்போது வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட 146 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இதில் ஆடுகளம் படத்திற்கு சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதும், அயன் மற்றும் ஈசன் படங்களுக்காக சிறந்த நடன இயக்குனருக்கான விஜய் அவார்ட் மற்றும் பிலிம் பேர் விருதுகளை வாங்கியுள்ளார்.

இவருடைய நடன இயக்கத்தில் இறுதியாக 'தானா சேர்ந்த கூட்டம்', 'கலகலப்பு 2' போன்ற படங்கள் வெளியாகியுள்ளது. இதன் பிறகு இவர் நாயகனாக நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. வாழ்க்கையில் ஒரு குப்பையாக மதிக்கும் ஒவ்வொரு விஷயமும் அவரை எந்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது என்பதே இந்த படத்தின் மைய கதை.

 

இதனால் தான் இந்த படத்திற்கு 'ஒரு குப்பை கதை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். மேலும் இந்த படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு மற்றும் ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஒரு குப்பை கதை செகண்ட் சிங்கிள்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்