விசுவாசத்தில் தலயுடன் இணைந்த தம்பி ராமையா

       பதிவு : Feb 24, 2018 10:48 IST    
After Veeram Vedalam comedy Actor Thambi Ramaiah officially joined in Ajith Viswasam Movie After Veeram Vedalam comedy Actor Thambi Ramaiah officially joined in Ajith Viswasam Movie

'விவேகம்' படத்தை தொடர்ந்து 'விசுவாசம்' படத்தின் மூலம் நடிகர் அஜித்குமார் நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளார்.

பில்லா, ஏகன், ஆரம்பம் போன்ற படங்களுக்கு பிறகு நயன்தாராவும் நான்காவது முறையாக அஜித் படத்தில் நாயகியாக இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முன்னதாக சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்த படத்தில் காமெடி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் யோகி பாபு நடிக்க உள்ளார்.

 

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான தம்பி ராமையா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருடைய நடிப்பில் இறுதியாக வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம், வீரா போன்ற படங்கள் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து அஜித்தின் 'விசுவாசம்' படத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் முன்னதாக நடிகர் அஜித்துடன் இணைந்து வீரம், வேதாளம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்தை உணர்ந்து தன்னால் முடிந்தவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவர் தம்பி ராமையா.

 

இவர் ஒரு காமெடி நடிகராக வில்லனாக தற்போது வரை 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் கும்கி, மைனா, கதை திரைக்கதை வசனம் இயக்கம், தனிஒருவன் போன்ற படங்களுக்கு சிறந்த காமெடி நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது, பிலிம்பேர் விருது மற்றும் விஜய் விருதுகளை வாங்கியுள்ளார்.

மேலும் இவருடைய இயக்கத்தில் மறைந்த நடிகர் முரளியின் 'மனுநீதி', வடிவேலுவின் 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' போன்ற படங்கள் வெளியானது. இதில் நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடித்த 'மனுநீதி' படம் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

 


விசுவாசத்தில் தலயுடன் இணைந்த தம்பி ராமையா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்