தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேசுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்த தமன்னா

       பதிவு : Apr 09, 2018 16:47 IST    
தமன்னா தற்போது தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதியுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். தமன்னா தற்போது தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதியுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்.

நடிகை தமன்னா, ஸ்கெட்ச் படத்திற்கு பிறகு தமிழில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' படத்திலும், தெலுங்கில் நா நுவ்வி, குயின் ரீமேக் மற்றும் இயக்குனர் குனால் கோலி இயக்கத்தில் பெயரிடபடாத படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இவருடைய நடிப்பில் இந்தியில் 'காமோஷி' மற்றும் மராத்தியில் 'ABC' போன்ற படங்களும் உருவாகி வருகிறது.

இந்நிலையில் தமன்னா, தெலுங்கில் பிரபல முன்னணி நடிகரான வெங்கடேஷ் டகுபதியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான வெங்கடேஷ் தற்போது வரை 71 படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருடைய நடிப்பில் தெலுங்கில் மூன்று படங்கள் உருவாகி வருகிறது. 57 வயதான இவர் முதன் முறையாக தமன்னாவுடன் தன்னுடைய 73வது படத்தில் ஜோடி சேர உள்ளார்.

 

இந்த படத்தை சுப்ரீம், ராஜா தி கிரேட் போன்ற படங்களை இயக்கிய அணில் ரவிபுடி இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் மற்றொரு நாயகனாக வருண் தேஜ் நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் நாயகியாக நடித்த மெஹரீன் நடிக்க உள்ளார்.

இவர் முன்னதாக இயக்குனர் அணில் ரவிப்புடி இயக்கத்தில் வெளியான ராஜா தி கிரேட் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக அணில் ரவிப்புடி இயக்கும் புதுப்படத்தில் இணைந்துள்ளார். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாகவுள்ள இந்த படத்திற்கு 'எப் 2-பண் அன்ட் ப்ரஸ்ட்ரேஷன் (F2 - Fun & Frustration)' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

 


தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேசுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்த தமன்னா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்