தும்ஹரி சுலு ரீமேக்கில் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க உள்ள வித்தார்த்

       பதிவு : Apr 14, 2018 21:38 IST    
நடிகர் வித்தார்த் தும்ஹரி சுலு படத்தின் தமிழ் ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நடிகர் வித்தார்த் தும்ஹரி சுலு படத்தின் தமிழ் ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக நடிகர் வித்தார்த் திகழ்கிறார். மைனா படத்தின் மூலம் தமிழ்  அறிமுகமான இவர் அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நல்ல படங்களை கொடுத்து வருகிறார். மைனா படத்திற்கு பிறகு இவரது நடிப்பில் வெளியான ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை போன்ற படங்கள் மக்களிடம் பேசும்படமாக அமைந்துள்ளது.

இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான படம் கொடிவீரன். இந்நிலையில் இவருடைய நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படதகவல் வந்துள்ளது. இவர் அடுத்ததாக இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘தும்ஹரி சுளு’ தமிழ் ரீமேக்கில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை வித்யா பாலன் கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடிக்க உள்ளார்.

 

மொழி படத்திற்கு பிறகு இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் பல வருடங்களுக்கு பிறகு ஜோதிகா நடிக்க இருக்கிறார். இந்த படத்தை பொஃப்டா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளது.
 


தும்ஹரி சுலு ரீமேக்கில் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க உள்ள வித்தார்த்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்