ads

தும்ஹரி சுலு தமிழ் ரீமேக்கில் ஜோதிகாவுடன் இணைந்த மஞ்சு லக்ஷ்மி

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா தும்ஹரி சுலு தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தற்போது நடிகை மற்றும் தொகுப்பாளர் மஞ்சு லட்சுமி இணைந்துள்ளார், Image Credit - @sri50 (Twitter)

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா தும்ஹரி சுலு தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தற்போது நடிகை மற்றும் தொகுப்பாளர் மஞ்சு லட்சுமி இணைந்துள்ளார், Image Credit - @sri50 (Twitter)

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா 'தும்ஹரி சுலு' தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை நடிகர் சூர்யா சமீபத்தில் தனது டிவிட்டரில் தெரிவித்தார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் ராதா மோகன், நடிகை ஜோதிகா கூட்டணி 'மொழி' 10 வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளது.

இந்த படத்தை போப்ட்டா பிலிம் நிறுவனம் சார்பில் தேசிய விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளரான தனஞ்செயன் கோவிந்த் தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை, தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளரான மஞ்சு லட்சுமி  இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் 14 படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கவுதம் கார்த்திக் அறிமுக படமான 'கடல்' படத்தில் செலினா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் சிறந்த துணை நடிகருக்கான இரண்டு முறை பிலிம்பேர் விருது, நந்தி மற்றும் சீமா விருதுகளையும் வாங்கியுள்ளார்.

தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் ஒளிபரப்பப்படும் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இதில் தமிழில் நடிகர் ஆதி நடிப்பில் வெளியான 'மறந்தேன் மன்னித்தேன்' படத்தையும் தெலுங்கில் 4 படங்களையும் இவர் தயாரித்துள்ளார். இதனை தொடர்ந்து மஞ்சு லட்சுமி தமிழில் ஜோதிகாவுடன் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் பணிபுரியவுள்ள நடிகர் நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவடைந்தவுடன் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

தும்ஹரி சுலு தமிழ் ரீமேக்கில் ஜோதிகாவுடன் இணைந்த மஞ்சு லக்ஷ்மி