ads
இந்தி படம் ரீமேக் வித்யாபாலன் கதாபத்திரத்தில் ஜோதிகா
வேலுசாமி (Author) Published Date : Feb 20, 2018 14:35 ISTபொழுதுபோக்கு
நடிகை வித்யாபாலன் நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை படம் 'தும்ஹரி சுலு'. இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் திரிவேணி எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியானது. இந்த படத்தில் வித்யாபாலன் 'சுலேச்சனா' என்ற கதாபாத்திரத்தில் குடும்ப தலைவியாக நடித்திருந்தார். இவர் ரேடியோவில் வேலை பார்த்து பல பிரச்சனைகளை சந்திக்கிறார். தற்போது இந்த படம் தமிழில் ரீமேக்காக உள்ளது.
இதில் நடிகை வித்யாபாலன் நடித்த 'சுலேச்சனா' என்ற கதாபத்திரத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார். தற்போது ஜோதிகா நடிப்பில் வெளிவந்த 'நாச்சியார்' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து ஜோதிகா, இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் 'செக்க சிவந்த வானம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா, அருண்விஜய், அரவிந் சாமி, அதிதி ராவ் என திரை வட்டாரங்கள் பலர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 'தும்ஹரி சுலு' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்க உள்ளார்.
இவர் முன்னதாக ஜோதிகா நடிப்பில் வெளிவந்த 'மொழி' படத்தை இயக்கியவர். தற்போது 10 வருடங்களுக்கு பிறகு ஜோதிகாவின் புது படத்தை இயக்க உள்ளார். இது குறித்து பேசிய ஜோதிகா "இந்த ரீமேக் படம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் பேசினார்கள். இன்னும் ஒப்பந்தம் முடிவடையவில்லை.
வித்யாபாலன் நடித்த 'தும்ஹரி சுலு' படத்தை பார்த்தேன் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். இப்போது 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்து வருகிறேன். என்னுடைய காட்சிகள் மார்ச் மாதத்தில் முடிவடைய உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு மே அல்லது ஜூன் மாதத்தில் 'தும்ஹரி சுலு' படப்பிடிப்பு தொடங்கலாம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.