பெண்புலியை வீட்டிலே அடைத்து வைக்காதீங்க சூர்யா

       பதிவு : Feb 19, 2018 15:14 IST    
Actor Sivakumar appreciated the performance of Jyothika in Naachiyaar and lauded the entire team Actor Sivakumar appreciated the performance of Jyothika in Naachiyaar and lauded the entire team

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் 'நாச்சியார்'. இந்த படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ், இவானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை நடிகர் சூர்யா தனது 2D என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை ஜோதிகாவின் மாமனார் சிவகுமார் படத்தை பார்த்து புகழ்ந்துள்ளார். அதில் "நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலாவின் கைவண்ணத்தை 'நாச்சியார்' பிரதிபலித்துள்ளது. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையும் பிஞ்சு காதலின் உணர்வையும் மாறுதலாக உணர வைத்துள்ளது.

 

நடிகர் ஜிவி பிரகாஷ் இனிமேல் துஷ்டபுயல் கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது. அந்த அளவுக்கு ஒரு ஜென்டில் மேனாக இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் உட்கார வைத்து விட்டார். அரசியாக நடித்த அந்த இளம் தேவதையை எங்கு தான் கண்டுபிடித்தீரோ..அவரது கண்கள் பேசும் மொழிகளும் முக பாவனைகளும் அடடா...

புதுமுகமாக காவல் அதிகாரியாக நடித்த ஜோதிகாவுக்கு நல்ல வரவேற்பை தரவேண்டும். குழம்ப வேண்டாம், அவரின் புதியதொரு தோற்றத்தை உண்மையாகவே கண்டு பிரமித்தேன். சிங்கத்துக்கே போலீசாக எப்படி நடிக்க வேண்டும் கற்று கொடுத்துவிட்டார். (சூர்யா..பெண்புலியை வீட்டிலே கட்டி வைக்காதீங்க...)

 

முதல் படத்தில் இசைஞானி இளையராஜா வின் முயற்சி எப்படி இருந்ததோ அதே அளவுக்கு இந்த படத்தின் இசையையும் கதைக்களத்திற்கு ஏற்றவாறு அமைத்து அதிர வைத்துள்ளார். அவருடைய உயிர் நாடியே அந்த இசை தான். எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அரசுக்காக ஊன் உயிரையும் தியாகம் செய்யும் காத்தவராயனையும், என்னவனுக்காக தவிக்கும் அரசியையும் தமிழ் சினிமா அவ்வளவு எளிதில் மறக்காது. கனமாக ஆரம்பித்து, லேசாக்கி, புன்னகையுடன் அனைவரையும் வழியனுப்பி வைத்த இயக்குனர் பாலாவுக்கு கோடான கோடி நன்றிகள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


பெண்புலியை வீட்டிலே அடைத்து வைக்காதீங்க சூர்யா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்