ads

திமிரு புடிச்ச விஜய் ஆண்டனியின் புது முயற்சி

thimiru pudichavan movie new updates

thimiru pudichavan movie new updates

இசையமைப்பாளராக தனது திரையுலக பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி தற்போது நடிகர், தயாரிப்பாளர், எடிட்டர் என தனது திறைமைகளை வலுப்படுத்தி செல்கிறார். தனது ஒவ்வொரு படங்களிலும் புது புது அனுபவத்தை ரசிகர்களுக்கு தந்து வருகிறார். இவர் தற்போது  பிரமாண்ட இயக்குனரான ராஜமௌலியின் முன்னாள் உதவியாளர் கணேஷா இயக்கும் ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் காவல் அதிகாரியாக களமிறங்கியுள்ள விஜய் ஆண்டனி புது முயற்சிகளை கையாண்டு வருகிறார். இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக தற்போது விஜய் ஆண்டனி சிலம்பம் பயின்று வருகிறார். 

இது குறித்து இயக்குனர் கணேஷா கூறும்போது, "அனைத்து துறைகளிலும் தன்னால் முடிந்த உழைப்பை அளிக்கும் விஜய் ஆண்டனியின் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய துணிவும், குணாதிசயங்களும் பாராட்டத்தக்கது. சிறு விஷயமாக இருந்தாலும் தெளிவாகவும், சரியாகவும் செய்யக்கூடியவர். இது போன்ற பண்புகள் தான் அவரின் வாழ்க்கையை உயர்த்தியுள்ளது. இந்த படம் வழக்கமான போலீஸ் VS வில்லன் கதையாக இல்லாமல், மைண்ட் கேம் காட்சிகளை உள்ளடக்கி அதில் பயணிக்கக்கூடிய பயணமாக இந்த படம் உருவாக உள்ளது. வருங்கால இளைஞர்களின் நோக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தும் படமாக 'திமிரு புடிச்சவன்' இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

thimiru pudichavan movie first look posterthimiru pudichavan movie first look poster

திமிரு புடிச்ச விஜய் ஆண்டனியின் புது முயற்சி