ads

விக்ரம் பிரபு நடிக்கும் புதுபட தலைப்பு அசுரகுரு

vikram prabhu new movie titled as asuraguru

vikram prabhu new movie titled as asuraguru

'கும்கி' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் விக்ரம் பிரபு தற்போது வரை இவன் வேற மாதிரி, வீர சிவாஜி, அரிமா நம்பி, சத்ரியன், நெருப்புடா போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் தற்போது 'பக்கா', 'துப்பாக்கி முனை' போன்ற படங்கள் அடுத்ததாக வெளிவரவுள்ளது. இதனை தொடர்ந்து விக்ரம் பிரபு 'அசுரகுரு' என்ற புது படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் நாயகியாக நடிப்பதற்கு தற்போது முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்த படத்தில் காமெடி நடிகர்கள் முனீஸ்காந்த், ஜெகன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கும் இந்த படத்திற்கு ராமலிங்கம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தை புது முக இயக்குனர் அ.ராஜ்தீப் இயக்க உள்ளார். இவர் 'அஞ்சனவித்தை' என்று குறும்படத்தின் மூலம் தமிழக அரசின் சிறந்த இயக்குனருக்கான விருதினை பெற்றவர். மேலும் இவர் இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.

இந்த படத்தை பற்றி இயக்குனர் ராஜ்தீப் கூறும்போது "இந்த படம் திகில் கலந்த அதிரடி திரைப்படம். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சில பழக்கங்கள் இருந்து வருகிறது. அதில் சில பழக்கங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த மாதிரியான பழக்கங்கள் எங்கு போய் விடுகிறது என்பதே 'அசுரகுரு' படத்தின் கதை." இந்த படத்தை தயாரிப்பாளர் ஜெ சதீஸ்குமார் ஜேஎஸ்பி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. உடுமலை பேட்டையில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கபட உள்ளது.

விக்ரம் பிரபு நடிக்கும் புதுபட தலைப்பு அசுரகுரு