ads

'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் கதையை சொல்லும் விக்ராந்த்

'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் கதையை சொல்லும் விக்ராந்த்

'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் கதையை சொல்லும் விக்ராந்த்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நாளை வெளியாக இருக்கும் படம் 'நெஞ்சில் துணிவிருந்தால்'. இந்த படத்தை அன்னை பிலிம் பேக்டரிஸ் தயாரிப்பின் கீழ் ஆண்டனி தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சுந்தீப் கிஷன், விகாரந்த், மெஹரீன் பிர்சாடா உள்ளிட்டோர் பலர் நடத்திருக்கின்றனர். பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தை பற்றி நடிகர் விக்ராந்த் அவரது நடிப்பு குறித்து பேட்டி அளித்துள்ளார். 

அதில் "நெஞ்சில் துணிவிருந்தால் சுசீந்திரன் சார் படத்தில் 'பாண்டிய நாடு' படத்திற்கு பிறகு நடித்திருப்பது எனக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு. இந்த படம் சமூகம் சார்ந்த மற்றும் இரண்டு நண்பர்களுக்கு இடையேயுள்ள நட்பை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'பாண்டிய நாடு' படம் எனக்கு ஒரு அடையாளத்தை தேடி தந்தது. அதே போல் இந்த படத்திலும் உணர்ச்சிபூர்வமான கதாபாத்திரம் அமைந்துள்ளது. சுசீந்திரன் சார் என்னை கெளரவ வேடத்தில் நடிக்க சொன்னாலும் நான் கண்டிப்பாக நடிப்பேன். மற்ற படங்களில் ஒரே மாதிரியாக இருப்பதாக கூறி என்னை வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். சாதுவாகவும், சிரிச்ச முகத்துடனும் நடித்துள்ளேன். 

இந்த படத்திலும் இதற்கு அடுத்து வரும் 'வெண்ணிலா கபடி குழு -2' இரண்டிலும் காமெடியான காட்சிகள் இருக்கவேண்டும் என்று முயன்றுள்ளோம். நடிகை மெஹரீனின் படங்கள் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் இந்த படமும் அவருக்கு வெற்றி படமாக அமையும். 'பாண்டிய நாடு' படம் பார்த்து விட்டு பாலா சார் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை ஊக்குவித்தார். அனைவரும் என்னை கவனித்து வருகிறார்கள் இதுவே எனக்கு பெருமையாக இருக்கிறது." என்று கூறினார். 

'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் கதையை சொல்லும் விக்ராந்த்