தயாரிப்பாளர்களின் 5 கோரிக்கைகளை ஏற்றால் உடனே வேலைநிறுத்தம் வாபஸ்

       பதிவு : Mar 30, 2018 11:28 IST    
சமீபத்தில் நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். சமீபத்தில் நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

கடந்த மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து ஒரு மாதமாக நடைபெற்று வரும் தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்காக சமீபத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

அதற்கு காரணம் தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷாலின் அந்த 5 கோரிக்கைகள் தான். இந்த கோரிக்கைகளை தியேட்டர் உரிமையாளர்கள் ஏற்றால் வேலை நிறுத்தத்தை உடனே வாபஸ் பெறுவதாக விஷால் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த கோரிக்கைகளை தியேட்டர் உரிமையாளர்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. விஷாலின் அந்த 5 கோரிக்கைகள்,

 

1. பொது மக்களுக்கு டிக்கெட் கட்டணத்திற்கு மேல் ஆன்லைனில் வாங்கும் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும். 
2. கட்டணத்தை குறைத்து முன்பு இருந்தது போல் ஏழை, நடுத்தர மற்றும் உயர் தர மக்கள் பார்க்கும் படி முதல், இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு பிரிவுகளை சேர்க்க வேண்டும்.
3. முன்பு தியேட்டருக்கு பிரிண்ட் தந்தது போல் தயாரிப்பாளர்கள் மாஸ்டரிங் செய்து கண்டன்ட் தருவார்கள். அதனை தியேட்டர் உரிமையாளர்கள் ப்ரொஜெக்டர் வைத்து திரையிட வேண்டும். 
4. திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு படத்தின் உண்மையான வசூலை கணினி பொருத்தப்பட்டு வெளிப்படையாக காண்பிக்க வேண்டும். வசூல் குறைவாக இருந்தால் அதற்கு ஏற்றார் போல் நடிகர்களுக்கு சம்பளம் குறைக்க படும்.
5. ஏராளமான பகுதிகளில் தியேட்டர்களை 80 சதவீதம் கையகப்படுத்தப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய திரையரங்குகளுக்கு மறுக்க படுகிறது. திரையிடப்படும் படங்களுக்கு வசூலில் இருந்து குறைவான சதவீத பங்கு மட்டுமே, அதுவும் நீண்ட இழுத்தரிப்பிற்கு பிறகு தயாரிப்பாளரிடம் கொடுக்கப்படுகிறது. இதனை தடுக்க அந்தந்த திரையரங்கு உரிமையாளர்கள் மட்டுமே நேரடியாக தயாரிப்பாளர்களிடம் படத்தை திரையிட ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

போன்ற கோரிக்கைகள் தயாரிப்பாளர் சங்க தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் டிக்கெட் வழங்குவதை கணினி மையமாக்குவது போன்ற ஒருசில கோரிக்கைகளை திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்று கொண்டதாகவும், இதர கோரிக்கைகளை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது. 

 


தயாரிப்பாளர்களின் 5 கோரிக்கைகளை ஏற்றால் உடனே வேலைநிறுத்தம் வாபஸ்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்