ads

பூஜையுடன் தொடங்கிய விஷ்ணு விஷாலின் புது படம்

vishnu vishal new movie with director venkatesh

vishnu vishal new movie with director venkatesh

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இறுதியாக 'கதாநாயகன்' படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் முருகானந்தம் இயக்கியிருந்தார். இந்த  படத்தில் விஷனுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்திருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் விஸ்ணு விஷால் தற்போது `சிலுக்குவார்பட்டி சிங்கம்', `ராட்சசன்', `ஜகஜால கில்லாடி' போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது விஷ்ணு விஷால் நடிக்க உள்ள புதுப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விஷ்ணு  விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் அடுத்ததாக புதுமுக இயக்குனரான வெங்கடேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை விஷ்ணுவின் சொந்த நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது. இந்த படம் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸின் தயாரிப்பில் 4-வது படமாக உருவாக உள்ளது.

இந்த படத்தின் மூலம் பாடகரான கிரிஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்க இருப்பதாகவும், இந்த படத்தில் இடம்பெறும் இதர தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

vishnu vishal new movie with director venkateshvishnu vishal new movie with director venkatesh
vishnu vishal new movie with director venkateshvishnu vishal new movie with director venkatesh

பூஜையுடன் தொடங்கிய விஷ்ணு விஷாலின் புது படம்