சண்டக்கோழி 2 படத்தில் வரலட்சுமிக்கு கணவராக விஸ்வந்த்

       பதிவு : Apr 18, 2018 17:43 IST    
நடிகர் விஸ்வந்த் சண்டக்கோழி 2 படத்தில் மதுரை பையனாக வரலட்சுமி கணவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஸ்வந்த் சண்டக்கோழி 2 படத்தில் மதுரை பையனாக வரலட்சுமி கணவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் அண்ணன், நண்பன் என சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகர் விஸ்வந்த். முன்னதாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான 'கபாலி' படத்திலும், நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான 'ஸ்கெட்ச்' படத்தில் விக்ரமுக்கு நண்பன் கதாபத்திரத்திலும் நடித்திருந்தார். இவர் 'ஓநாய்கள் ஜாக்கிரதை' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். தற்போது வளர்ந்து வரும் நடிகராக காணப்படும் விஸ்வந்த், தற்போது நடிகர் விஷால் நடிப்பில், இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'சண்டக்கோழி 2' படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிகை வரலட்சுமி வில்லி அவதாரம் எடுத்துள்ளார். அவருடைய கணவராக விஸ்வந்த் நடித்து வருகிறார். இது குறித்து நடிகர் விஸ்வந்த் கூறுகையில் "சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. என்னுடைய கதாபாத்திரதிற்கான படப்பிடிப்பு இன்னும் எடுக்க வேண்டியுள்ளது. இந்த படத்தில் ஒரு மதுரை பையனாக நடித்துள்ளேன். எனக்கு ஜோடியாக வரலட்சுமி நடித்துள்ளார். லிங்குசாமி சார் படங்களை பார்த்து நான் நிறையவே ரசித்துள்ளேன். இந்த படத்தின் ஒரு சண்டைக்காட்சியில் என்னுடைய கண்கள் நன்றாக உள்ளது என தெரிவித்தார். லிங்குசாமி சார் எப்பவும் தட்டி கொடுப்பார். அவருடைய படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது.

 

இன்னும் விஷால் சார் கூட நடிக்கும் படியான படப்பிடிப்பு வரவில்லை. அவர் தற்போது சில வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். சீக்கிரமாக அவர் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்தால் நன்றாக இருக்கும். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். இந்த கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்தவாறு மிகவும் ஒரு போல்டான கதாபாத்திரம். அட்டகத்தி, கபாலி, ஸ்கெட்ச் போன்ற படங்களில் மெட்றாஸ் பையனாக நடித்தேன். இதன் பிறகு ஒரு மதுரகாரனா இந்த படம் எனக்கு ஒரு அடையாளத்தை தேடி கொடுக்கும் என நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


சண்டக்கோழி 2 படத்தில் வரலட்சுமிக்கு கணவராக விஸ்வந்த்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்